News April 24, 2025
கோகுல இந்திராவின் கணவர் காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான சந்திரசேகர் காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
Similar News
News April 25, 2025
மாஸ் சாதனை படைத்த ‘கிங்’ கோலி..!

டி20 போட்டிகளில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி மற்றொரு சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். முதல் பேட்டிங்கின்போது அவர் ஒட்டுமொத்தமாக 62 அரைசதங்கள் அடித்து உலகளவில் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில், கோலிக்கு அடுத்தபடியாக, பாபர் ஆசம்(61), கிறிஸ் கெய்ல்(57), டேவிட் வார்னர் (55) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோலியின் இந்த சாதனையை முறியடிப்பது யார்?
News April 25, 2025
கணவர் இறந்தது தெரியாத மனைவி.. கண்ணீர் கதை

‘என்னுடைய தாய் இதயநோயாளி என்பதால் தந்தை இறந்த செய்தியை அவரிடம் கூறவில்லை, காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என்றே கூறியுள்ளோம்’ என பஹல்காம் தாக்குதலில் மரணமடைந்த கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி கூறியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், சமீபத்தில் இந்தியா வந்து, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை கண்ணீர் கதைகளோ?
News April 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!