News June 19, 2024
காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்: அமைச்சர்

தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, இன்னும் சில நாள்களுக்குள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஜூன் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 19, 2026
Summer Tips: சூட்டைத் தணிக்க இத ட்ரை பண்ணுங்க…!

<<19427290>>கோடைக்காலம்<<>> தொடங்கிவிட்டாலே, சூட்டைத் தணிக்க தர்பூசணி, இளநீர் கடைகளை நோக்கித்தான் மக்கள் படையெடுப்பார்கள். இவற்றை விடவும் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவது பாதாம் பிசின்தான். இரவு ஊறவைத்த பாதாம் பிசினை, காலையில் பால், மோர் உள்ளிட்ட பானங்களில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், ஜீரணக் கோளாறை சரிசெய்யவும் இது ரொம்பவே உதவியாக இருக்குமாம்.
News March 19, 2026
தொகுதிப் பங்கீடு இழுபறி.. கமல் எடுத்த முடிவு

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, கமல் தலைமையில் நாளை மநீம மா.செ., & செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. <<19424797>>திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில்<<>> இழுபறி நீடிக்கும் நிலையில், இக்கூட்டத்தில் உதயசூரியனில் போட்டியிடுவதா (அ) டார்ச் லைட்டில் போட்டியிடுவதா என்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் மநீமவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியானது.
News March 19, 2026
வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு பக்கம் மழை பெய்தாலும், இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டாயத் தேவை இருந்தால், பருத்தி ஆடைகள் அணிந்து குடையுடன் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT


