News April 30, 2025
அட்சய திருதியை நாளில் வணங்க வேண்டிய கடவுள்கள்!

அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். விஷ்ணுவை வணங்குவது செல்வம், மகிழ்ச்சியை கொடுக்கும். லட்சுமியை வணங்குவது பணம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். விநாயகரை வணங்குவது தடைகளை நீக்கும். குபேரனை வணங்குவது செல்வத்தை கொடுக்கும். சிவனை வணங்குவது மன அமைதியை கொடுக்கும். SHARE IT.
Similar News
News January 21, 2026
பெண்களுக்கு ₹1.40 லட்சம் தரும் மத்திய அரசு திட்டம்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹1.40 லட்சம் வரை மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை 3.5 ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். கடன் பெற விரும்புவோரின் ஆண்டு குடும்ப வருமானம் ₹3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே கிளிக் பண்ணுங்க. பல பெண்களின் வாழ்க்கையை உயர்த்தும், SHARE THIS.
News January 21, 2026
அது எனக்கே தெரியாது… புலம்பும் வ.தேச கேப்டன்

டி20 WC விளையாடப் போகிறோமா, இல்லையா என்பது தனக்கு இதுவரை தெரியாது என வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் கூறியுள்ளார். டி20 WC-ல் பங்கேற்க இந்தியா செல்ல விருப்பமா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, `ஏன் என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்? இதற்கு பதில் சொல்வதால் எனக்கு பிரச்னை ஏற்படும். எனவே நோ ஆன்சர்’ என்று பதிலளித்துள்ளார். வ.தேச அணியில் லிட்டன் தாஸ் மட்டுமே இந்து என்பது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் பெற்று, 22 கேரட் 1 கிராம் தங்கம் மீண்டும் ₹165 உயர்ந்து ₹14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,320 அதிகரித்து ₹1,15,320-க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரே நாளில் 3 மணி நேர இடைவெளியில் சவரனுக்கு ₹4,120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


