News May 1, 2024

இரண்டாக பிரிகிறது கோத்ரெஜ் குழுமம்

image

127 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோத்ரெஜ் குழுமம், 2ஆக பிரியவுள்ளது. கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் ஆகியோரும், கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தை ஜம்ஷித் கோத்ரெஜ், ஸ்மிதா ஆகியோரும் நிர்வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வருட பங்கு உரிமைப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. செபி ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான மற்ற பணிகள் தொடங்கும்.

Similar News

News January 31, 2026

இரட்டை இலக்க தொகுதிகளை கேட்போம்: திருமாவளவன்

image

எல்லா சூழல்களையும் கருத்தில் கொண்டு தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் இரட்டை இலக்க தொகுதிகள் பெற வேண்டும் என்பது தான் விசிகவின் கோரிக்கையாக உள்ளது என்றும், 2011-ல் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். ஆனால் 2021-ல் 6-ஆக குறைந்தது. இந்தமுறை இரட்டை இலக்க தொகுதிகள் கேட்போம். ஆனால் அதை நிபந்தனையாக முன்வைக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 31, 2026

ராஜமெளலியின் ’வாரணாசி’ ரிலீஸ் தேதி இதுதான்!

image

மகேஷ் பாபு நடிக்கும் தனது ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘வாரணாசி’யின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, RRR ஆகிய பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து பெரும் ₹1,200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ராஜமெளலியின் வாரணாசி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!