News July 8, 2025
கடவுள் ராமர் எங்கள் நாட்டில் பிறந்தவர்… நேபாள PM!

நேபாள PM கே.பி.சர்மா ஒலியின் கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. வால்மீகி எழுதிய ராமாயணத்தின் அடிப்படையில் ராமர் தங்களது நாட்டில்தான் பிறந்தார் என்று அவர் கூறியுள்ளார். மேலும், சிவனும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலியாக அயோத்தியை ப்ரமோட் செய்வதாக அவர் இந்தியாவையும் விமர்சித்துள்ளார். இவரின் கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News September 9, 2025
பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி

லடாக்கில் உள்ள சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த வீரர்கள் குஜராத், UP, ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 12,000 அடி உயரத்தில் சியாச்சின் உள்ளது. இங்கு பனிச்சரிவு உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்வது உண்டு.
News September 9, 2025
சற்றுமுன்: கூட்டணிக்கு வர OPS, TTV-க்கு அழைப்பு

பாஜக கூட்டணியில் OPS, TTV இருக்க வேண்டும் என்று அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். EPS-க்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய செங்கோட்டையன், நேற்று அமித்ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியிருந்த நிலையில், அண்ணாமலையின் இந்த அழைப்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய OPS, TTV-ஐ அண்ணாமலை சரி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
News September 9, 2025
PHOTO-ஐ பயன்படுத்த கூடாது.. வழக்கு போட்ட ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சையான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில், தனது தனிப்பட்ட தகவல்கள், வணிக ரீதியாகவோ, வேறு எந்த காரணத்துக்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். மேலும், தனது அனுமதியின்றி பெயர், போட்டோ, குரல் உட்பட எந்தவொரு விவரத்தையும் பயன்படுத்த ஊடகங்கள், தனிநபர்களுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.