News April 11, 2025
God Bless Us மாமே! அஜீத் பட ஸ்டைலில் KKR போஸ்டர்!

சென்னை – கொல்கத்தா அணிக்கு இடையே இன்று இரவு சேப்பாக்கத்தில் லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் தல தோனியை சீண்டும் வகையில், தல அஜீத் நடித்த குட் பேட் அக்லி திரைப்பட ஸ்டைலில் கொல்கத்தா அணி போஸ்டர் வெளியிட்டுள்ளது. ‘God Bless Us’ மாமே எனவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
இருமல் மருந்துகளை இனி ஈஸியாக விற்க முடியாது

ம.பி.யில் இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருமல் மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டாக்டரின் பரிந்துரை சீட்டு, மருந்து விற்பனைக்கான உரிமை இருந்தால் மட்டுமே இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
News November 19, 2025
திரு உத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்திரகோசமங்கையில் அருள்பாளித்து கொண்டு இருக்கும் மங்களநாத சுவாமி ஆலயத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்திற்கு முன் ஜனவரி 2ம் தேதி(02.01.2026) கலைக்கப்பட்டு மரகத திருமேனியாக கட்சியலிப்பார். அதன்பின் ஜனவரி 3ஆம் தேதி (03.01.2026)அதிகாலையில் சந்தானம் சாத்தப்பட்டு அன்று முழுவதும் கட்சியலிப்பார். *ஷேர் பண்ணுங்க
News November 19, 2025
நகைக்கடையை உடைத்து திருட முயற்சி

சின்னசேலத்தைச் சேர்ந்த சீனிவாசன் கடந்த ஒன்றரை வருடங்களாக சின்னசேலம் சேலம் மெயின் ரோடு பகுதியில் நகை கடையை நடத்தி வருகின்றனர். இன்று (நவ.18) அதிகாலை இரண்டு மர்மநபர்கள் மாடிபடி வழியாக வந்து ஷட்டரை கட்டிங் மிஷின் வைத்து கட்டிங் செய்து பொருட்களை திருட முயற்சித்துள்ளதாக சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


