News October 25, 2024
வேப்பூரில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் விடிய விடிய ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு துவங்கிய ஆட்டுச் சந்தை இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு என பல்வேறு வகையான ஆடுகள் ரூ. 5ஆயிரம் முதல் ரூ. 37 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News January 6, 2026
கடலூர்: பேச்சுக் குறைப்பாடு நீங்க இங்கே செல்லவும்!

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் ராமநாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் உள்ள பிரகாரத்தில் சுப்பிரமணியர் சன்னதியில், பாம்பன் சுவாமிகள் கடும் தவம் மேற்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார் என வரலாறு கூறுகிறது. ராமநாதேஸ்வரர் ஊமைப் பெண்ணை பேச வைத்த சிறப்பும் இந்த ஆலயத்துக்கு உள்ளதால் பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம். SHARE பண்ணுங்க!
News January 6, 2026
கடலூர்: 10th போதும் அரசு வேலை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 6, 2026
கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை…

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனமழையும், ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


