News August 15, 2024
‘G.O.A.T’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘G.O.A.T’ படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 17) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். விஜய், பிரசாந்த், லைலா, சினேகா, மீனாக்ஷி சௌத்ரி நடித்துள்ள இப்படம் செப்.5ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. யாரெல்லாம் இப்படத்திற்கு வெயிட்டிங்?
Similar News
News December 3, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயணம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில், மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பாக நேற்று (டிச.02) நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை பார்வையிடுவதற்கு, அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இருவரும் சேர்ந்து கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
News December 3, 2025
Cinema 360°: ₹62.47 கோடி வசூலித்த தனுஷின் இந்தி படம்

*அனுபமாவின் ‘லாக்டவுன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ இந்தியாவில் மட்டும் இதுவரை ₹62.47 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *திவ்ய பாரதி நடித்துள்ள ‘GOAT’ டீசர் வெளியாகியுள்ளது. *அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே டீசர் டிச.7-ம் தேதி ரிலீசாகிறது. *பசுபதியின் ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடர் டிச.5 முதல் சோனி லைவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
News December 3, 2025
சிரஞ்சீவியை போல் விஜய் சறுக்குவார்: தமிழருவி மணியன்

அதிமுக அணியில் தவெக இடம்பெற EPS-ஐ CM வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதற்கு வாய்ப்பில்லை என்ற அவர், இதனால் கூட்டணி அமையவும் வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.. மேலும், எப்படி ஆந்திராவில் சிரஞ்சீவி ஒரு அனுபவத்தைப் பெற்றாரோ அதே அனுபவத்தை விஜய் பெறுவார் எனவும், சிரஞ்சீவியை போல் கண்டிப்பாக சறுக்குவார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


