News August 8, 2024
GOAT இசை வெளியீட்டு விழா நடைபெறாது?

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகிவரும், GOAT படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வழக்கமாக, தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது விஜய்யின் வழக்கம். ஆனால், தவெக மாநாடு இன்னும் சில தினங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், GOAT இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
Similar News
News November 5, 2025
மனிதர்கள் தடயமே இல்லாமல் போவார்கள்: நாசா எச்சரிக்கை

பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதால், மனிதர்களே வாழ முடியாத நிலை உருவாகலாம் என நாசா எச்சரித்துள்ளது. நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் கடல்களில் உள்ள நுண்ணுயிர்கள் வெப்பமயமாதல் & அமிலமயமாக்கல் காரணமாக குறைந்து வருகின்றனராம். மேலும், காடுகளை அழிப்பது, மாசு அதிகரிப்பு, கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறதாம்.
News November 5, 2025
BREAKING: விஜய் கண்ணீருடன் அஞ்சலி

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கிய உடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன்பின், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மெளன அஞ்சலி செலுத்தினர்.
News November 5, 2025
பொன்முடிக்கு மீண்டும் பதவி: இதுதான் காரணமா?

பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசியதால் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இதற்கு பின்னால் தலைமையின் மாஸ்டர் பிளான் இருக்கிறதாம். அதாவது, விழுப்புரத்தை கவனித்து வந்த MRK பன்னீர்செல்வம் கடலூரை சேர்ந்தவர் என்பதால், கட்சிப் பணிகளை செய்ய சிரமம் இருக்கிறதாம். எனவே, தேர்தலை கருத்தில் கொண்டு பொன்முடியை ஆட்டத்திற்குள் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.


