News April 13, 2024
‘GOAT’ நாளை சம்பவம் உறுதி!

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘THE GOAT’. செப்.5ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, படத்தின் முதல் பாடல் ஏப்.14ல் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், ‘நாளை சம்பவம் உறுதி’ என பதிவிட்டுள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Similar News
News July 9, 2025
இந்தியாவுக்கு கூடுதலாக 10% வரிவிதிப்பு: டிரம்ப்

இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரியுடன் விரைவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அமெரிக்க டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால் அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது அமலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
’சுரங்கப்பாதைக்கு அனுமதி தராததே விபத்துக்கு காரணம்’

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஓராண்டாக அனுமதி தராததே விபத்துக்கு காரணம் என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். நடப்பாண்டில் கடலூரில் எத்தனை முறை CM ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் எனவும் கேள்வி எழுப்பினார்.
News July 9, 2025
அதிகாலையில் எழுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. அதிகாலை எழுவதால் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். யோகா, உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கும். இதனால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். பின்பு இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.