News May 12, 2024
‘G.O.A.T’ பட இசை வெளியீட்டு விழாவால் ரசிகர்கள் சோகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் 2ஆவது பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியாத ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Similar News
News September 18, 2025
ராசி பலன்கள் (18.09.2025)

➤மேஷம் – இன்பம் ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – அன்பு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – அசதி ➤துலாம் – சாந்தம் ➤விருச்சிகம் – முயற்சி ➤தனுசு – ஓய்வு ➤மகரம் – பாராட்டு ➤கும்பம் – பரிவு ➤மீனம் – பாசம்.
News September 18, 2025
இந்த நடிகைக்கு ₹530 கோடி சம்பளமாம்..!

உலகம் முழுவதுள்ள இளசுகளை கவர்ந்துவரும் ஹாலிவுட் இளம் நடிகை சிட்னி ஸ்வீனி, பாலிவுட் சினிமாவில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், அவருக்கு ₹530 கோடி சம்பளம் வழங்க பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா எனத் தெரியவில்லை. அப்படி உண்மையானால், பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமே அவர்தான்.
News September 17, 2025
சற்றுமுன்: விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டார்

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு டஃப் கொடுக்கும் வகையில், ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தவெகவின் உறுப்பினர் சேர்க்கை பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பிரத்யேக செயலியை அவர் வெளியிட்டிருந்தார். தற்போது, உறுப்பினர் சேர்க்கைக்காக 234 தொகுதிகளுக்கும் தலா 8 நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார். 2 கோடியை எட்டுமா?