News March 17, 2025
ஆடு பகை… குட்டி உறவு..!

EPSஐ தொடர்ந்து புறக்கணித்து வரும் செங்கோட்டையன், இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அப்போது, கடம்பூர் ராஜூவுடன் அவர் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன், மற்ற தலைவர்களையும் தன் வசம் இழுக்கிறார் என்று பேச்சு அடிபடும் வேளையில், இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. என்னதான் நடக்கிறது அதிமுக கூடாரத்தில்!
Similar News
News September 23, 2025
தேசிய சினிமா விருதுகளுக்கு ரொக்க பரிசு எவ்வளவு?

71-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதானது தங்க தாமரை (அ) வெள்ளி தாமரை பதக்கங்கள், ரொக்கப் பரிசு ஆகிய வடிவில் வழங்கப்படும். தங்க தாமரை பதக்கம் பெறுபவருக்கு ₹3 லட்சம், வெள்ளி தாமரை பதக்கம் பெறுவோருக்கு ₹2 லட்சமும் ரொக்கம் வழங்கப்படும். ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு தங்க தாமரை பதக்கம், பொன்னாடையுடன் ₹10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
News September 23, 2025
ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?
News September 23, 2025
எத்தனை பேர் வரி செலுத்துகிறார்கள் தெரியுமா?

நாட்டு மக்கள் தொகை 142.21 கோடியாக இருக்கும் நிலையில், அவர்களில் வெறும் 4%, அதாவது 3.51 கோடி பேர் தான் கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தியதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 51.69 கோடி பேர் பான், ஆதார் கார்டுகளை இணைத்துள்ளதாகவும், அவர்களில் 7.20 கோடி பேர் ITR தாக்கல் செய்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 50% பேர் வருமான செலுத்துவதாகவும் அவர்கள் ஒப்பிடுகின்றனர்.