News June 6, 2024
ஆடு பிரியாணி: திமுகவினருக்கு அண்ணாமலை சவால்

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படுதோல்வியடைந்தார். இதையடுத்து, திமுகவினர் மட்டன் (ஆடு) பிரியாணி விருந்து கொடுத்தனர். இந்நிலையில், திமுகவினர் ஆட்டை கொடூரமாக வெட்டி, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக விமர்சித்த அண்ணாமலை, திமுகவினருக்கு என் மீது கோபம் இருந்தால் ஆட்டை வெட்ட வேண்டாம், என் மீது கை வைக்கலாம் என சவால் விடுத்துள்ளார்.
Similar News
News August 8, 2025
SK-வின் 2 புதிய படங்களுக்கு இசையமைக்கும் சாய்

‘பராசக்தி’, ‘மதராஸி’ படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த 2 படங்களுக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 படங்களையும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
News August 8, 2025
11-ம் வகுப்புக்கு நடப்பாண்டு பொதுத்தேர்வு இல்லை: TN அரசு

TN அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே தொடரும் என்றும் கூறியுள்ளது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், அதனை மாநில அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
News August 8, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪தமிழகத்தின் <<17339521>>மாநிலக் <<>>கல்விக் கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார்.
✪எந்த <<17338572>>கட்சியையும் <<>>கூட்டணிக்கு அழைக்கவில்லை: EPS
✪ராகுலின் <<17338941>>புகாருக்கு <<>>EC விளக்கம் அளிக்க வேண்டும்: சசிதரூர்
✪உச்சம் தொடும் விலை.. தங்கம் சவரனுக்கு ₹75,760-க்கு விற்பனை
✪ரஜினி பட <<17338273>>நடிகையின் <<>>அண்ணன் அடித்துக் கொலை!