News July 3, 2024
ஊழலை ஒழிப்பதே இலக்கு: மோடி

ஊழலை ஒழிப்பதே தமது இலக்கு, தீர்மானம் என்று, பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். ஊழல் என்பது, நாட்டை அரிக்கும் கரையான்கள் போன்றது என குறிப்பிட்ட அவர், ஊழலை வெறுக்கும் மனநிலையை மக்கள் மனதில் ஏற்படுத்தவே, தாம் முழு வீச்சில் போராடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு என்பது, தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு அளவீடாக கருதவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
Similar News
News November 19, 2025
எந்த மாநிலத்தில் தபால் வாக்குகள் அதிகம் தெரியுமா?

நேரில் வந்து வாக்களிக்க இயலாத தேர்தல் பணியாளர்கள், போலீசார், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தபால் மூலம் வாக்குகளை செலுத்துகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகமாக ஆந்திராவில் சுமார் 5.12 லட்சம் தபால் வாக்குகள் 2024 தேர்தலில் பதிவாகியுள்ளன. 2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 3.76 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சுமார் 3.11 லட்சம் தபால் வாக்குகளுடன் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
News November 19, 2025
எப்ஸ்டீன் ஆவண மசோதா: உடையுமா டிரம்ப்பின் ரகசியம்?

USA-வை உலுக்கிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிடும் மசோதாவை, USA காங்., ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப், எலான் மஸ்க் உள்பட பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக டிரம்ப் இதை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டார். டிரம்ப் கையெழுத்துக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ள நிலையில், பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 19, 2025
மகளிர் வங்கி கணக்குகளில் ₹15,000: சீமான்

தேர்தலுக்கு முன் பெண்களின் வங்கிகணக்கில் திமுக அரசு பணம் செலுத்தலாம் என சீமான் தெரிவித்துள்ளார். பிஹாரில் NDA வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் பெண்களின் வங்கிக்கணக்கில் ₹10,000 செலுத்தியதுதான். அந்த ஃபார்முலாவை கையில் எடுத்து திமுகவும், மகளிர் வங்கிக் கணக்கில் ₹15,000 செலுத்த வாய்ப்புள்ளது. எனவே, இப்போதே தாய்மார்களை வங்கிகளில் புதிய கணக்கை ஆரம்பிக்க சொல்ல வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.


