News February 23, 2025
மெரினாவுக்கு போங்க: பீச்சு; மேட்சு ரெண்டும் பார்க்கலாம்!

இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்றுவிட்டால் போதும், லைவ்வாக மேட்ச்சை கண்டுகளிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரிலும், பெசன்ட் நகரில் போலீஸ் பூத் அருகிலும் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மெரினா செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
Similar News
News February 23, 2025
சுரங்கத்தில் தெரிந்த தொழிலாளியின் கை

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதனிடையே, சுரங்கத்தில் 14 கி.மீ தூரத்தை அடைந்த நிலையில், சேற்றில் சிக்கியவாறு ஒரு தொழிலாளியின் கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளே சிக்கிய 8 தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அனைவருமே சேற்றில் சிக்கியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
News February 23, 2025
முதல்வர் மருந்தகத்தில் 75% வரை விலைக் குறைவு

தமிழகம் முழுவதும் விரைவில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படவுள்ளன. தனியார் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகள் இந்த மருந்தகங்களில் வெறும் 25% விலையில் கிடைக்கும். உதாரணத்திற்கு, சர்க்கரை நோய்க்கு உட்கொள்ளப்படும் Metformin மாத்திரை (30) தனியார் மருந்தகங்களில் ₹70, மத்திய அரசின் பிரதமர் மருந்தகங்களில் ₹30, முதல்வர் மருந்தகத்தில் ₹11 மட்டுமே. இதன்மூலம், மக்கள் 75% வரை சேமிக்கலாம்.
News February 23, 2025
விதவைகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசு

விதவைகள், EX ராணுவ வீரர்களுக்கு இலவச வேளாண் மின்சார இணைப்பு நிச்சயம் வழங்க வேண்டும், மறுக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தெளிவுபடுத்தியுள்ளது. சிறப்பு பிரிவின்கீழ் மின் இணைப்பு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அதற்கு TNPDCL மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அவரும், மேலும் சிலரும் புகார் அளித்தனர். இதையடுத்து TNERC ஆணையிட்டுள்ளது.