News February 24, 2025
ரேஷன் கடைகளுக்கு சென்று E-KYC செக் பண்ணுங்க

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் E-KYC செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள், புதிதாக யாருக்கேனும் ஆதார் எடுக்கப்பட்டிருந்தால் அவர்களது விபரங்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும். KYC சரிபார்ப்பு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
Similar News
News February 24, 2025
10வது போதும்! மத்திய அரசில் 21,413 காலிப்பணியிடங்கள்

தபால் அலுவலகங்களில் காலியாக இருக்கும் 21,413 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. MTS Postman, Mailguard Postக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், Postal Assistant, Sorting Assistantக்கு டிகிரி, கணினி அறிவும் வேண்டும். 18 – 32 வயதுடையோர் பிப். 1 முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின்றி மெரிட் அடிப்படையில் தேர்வு நடைபெறும். சம்பளம் ₹29,380 வரை. <
News February 24, 2025
யார் கோழை? அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம். மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர் CM ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். எங்கள் முதல்வர் இரும்பு மனிதர். கோழை என கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் என அவர் அன்புமணியை விமர்சித்துள்ளார்.
News February 24, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.24) சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராம் ₹8,055க்கும், சவரன் ₹64,440க்கும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ₹108க்கும், கிலோ வெள்ளி கிலோ ₹1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் சற்று இறங்கு முகத்தை சந்தித்த தங்கம், தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.