News February 8, 2025
அரசு மருத்துவமனைக்கு போங்க: டி.இமான்
உங்களது பிள்ளைகளை ஒரு முறையாவது அரசு மருத்துவமனை வார்டுகளுக்கு கூட்டிக் கொண்டுபோய் காட்டுங்கள் என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். அப்போதுதான், மக்கள் உடல் நலக்குறைவால் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், நமது உடல் எவ்வளவு முக்கியம் என்பதை பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 9, 2025
நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் தேர்தல் வெற்றி: CM பெருமிதம்
மகத்தான திட்டங்களை தரும் திமுக அரசுக்கு, ஈரோடு (கி) மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடியதாக சாடிய அவர், அதிமுக மக்கள் மனதில் இருந்து மறைந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், வாக்களித்த மக்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம் என்றும் கூறினார்.
News February 9, 2025
Airtel, BSNL, Vi பயனர்களுக்கு: ரீசார்ஜ் பண்ணாமலே பேசலாம்
சில நேரங்களில் உங்களால் ரீசார்ஜ் பண்ண முடியாமல் போகலாம். அதனால் மொபைலில் கால் பண்ண முடியாத நிலை ஏற்படலாம். இதற்காக கவலை வேண்டாம். இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் WiFi calling அம்சம் உள்ளது. உங்கள் செட்டிங்ஸ் சென்று இதை ஆக்டிவேட் செய்துகொண்டால், ரீசார்ஜ் செய்யாத நிலையிலும், சிக்னல் மோசமாக இருந்தாலோ WiFi calling மூலம் ப்ரீயாக பேசலாம். ஆனால், உங்கள் வீட்டில் WiFi இருக்க வேண்டியது அவசியம்.
News February 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
இன்று (பிப்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!