News December 5, 2024
தூய காற்றை சுவாசிக்க 5 ஸ்டார் ஹோட்டல் போங்க..!

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 5 ஸ்டார் ஹோட்டல்கள் தூய காற்றை கஸ்டமர்களுக்கு வழங்கி வருகின்றன. நகரத்தின் காற்று தர மதிப்பீடு 397 என அதிகரித்துள்ள நிலையில், 58 என்ற அளவில் தூய காற்றை அவை வழங்குகின்றன. ஆனால், இதெல்லாம் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் தான். சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், இங்கும் அத்தகைய தூய காற்று சேவை விரைவில் அறிமுகமாகலாம்.
Similar News
News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. அப்போது, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 29, 2025
பங்குச்சந்தைகளில் மாற்றம் இல்லை

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற, இறக்கங்களை கண்டு இறுதியில் பெரிய மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது. காலையில், வர்த்தகம் தொடங்கியவுடன், 120 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி, மதியம் 12 மணியளவில் சரிவைக் கண்டது. சில நேரங்களில் நேற்றைய புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிஃப்டி, வர்த்தக நேர முடிவில் 7 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 24,335 புள்ளிகளில் இருந்தது. சென்செக்ஸ் இன்று 70 புள்ளிகள் உயர்ந்தது.
News April 29, 2025
காஷ்மீர்: கவனம் ஈர்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி அரசை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பக்குவமாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான சசிதரூர், ஓவைசி, உமர் அப்துல்லா ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர். ஆளும் அரசை சாடாமலும், பாகிஸ்தானை கண்டித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பாராட்டப்படுகின்றன.