News October 3, 2025
இந்த ரூட்ல போங்க.. ஜாலியா இருக்கும்!

ஒவ்வொரு பயணமும் ஒரு கதை சொல்லும். அந்த வகையில் ஒரு இலக்கை நோக்கி செல்லும் சாலை பயணம் ஒரு புதுமையான அனுபவம். ஒவ்வொரு திருப்பமும் ஒரு அழகான தருணம். விழிகள் பார்க்கும் காட்சிகள், மனதில் நீங்காது நிலைத்திருக்கும். சாலை பயணங்கள் செய்ய சில சிறந்த வழிகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. பயணத்தை தொடங்க நீங்கள் தயாரா? எங்க போறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 3, 2025
ஆப்கான் அமைச்சரின் இந்திய பயணத்துக்கு UN அனுமதி

ஆப்கான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி அக்.9 – 16 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், இதற்கு ஐநா சபை அனுமதி வழங்கியுள்ளது. UN கவுன்சில் 1988 (2011) தீர்மானத்தின்படி, தலிபான்களுடன் தொடர்பிலுள்ள ஒருவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், அரசு பயணம் (அ) மருத்துவ காரணங்களுக்காக விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
News October 3, 2025
சற்றுமுன்: விஜய் தொண்டர் அதிரடி கைது

கரூர் துயர சம்பவம் தொடர்பாக அவதூறாக பேசியதாக தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து பேசிக் கொண்டிருந்த பிரபல யூடியூபர்களை அவதூறாக பேசியதாக சென்னையை சேர்ந்த தவெக உறுப்பினர் கோகுல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, கரூர் விவகாரம் குறித்து வதந்தி பரப்பியதாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 3, 2025
IND கிரிக்கெட் அணியின் செயல் மூன்றாம் தரம்: பசித் அலி

இந்திய கிரிக்கெட் அணி No 1 ஆக உள்ளது, ஆனால் அவர்களது செயல் மூன்றாம் தரமாக உள்ளதாக முன்னாள் பாக்., வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஆசிய கோப்பை டிராபியை நக்வியிடம் இருந்து இந்தியா வாங்க மறுத்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், ஒருவேளை ஆசியக் கோப்பை தொடரை ICC நடத்தி, அதில் பாக்., வென்ற பின்னர் ஜெய் ஷா கைகளால் வாங்க மாட்டோம் என்று சொன்னாலும் அது தவறானது என்றார்.