News April 13, 2025
விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ.. EX மினிஸ்டர்

RSS எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்? என்று மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். SC தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ என எச்சரித்துள்ளார்.
Similar News
News April 14, 2025
இபிஎஸ் புகைப்படத்தை தவிர்த்த டி.ஜெ.,

ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்தார். ஆனால், அவர் பேசிய அடுத்த வாரமே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. கூட்டணி அறிவிப்புக்கு பின் அவர் மவுனமாக இருந்த ஜெயகுமார் வெளியிட்ட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இபிஎஸ் புகைப்படத்தை தவிர்த்துள்ளார். இது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
News April 14, 2025
வரலாற்றில் இன்று

* 1891 – சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினம்
* 1907 – எம். ஆர். ராதா பிறந்த தினம்
* 1950 – தமிழக ஆன்மீகவாதி ரமண மகரிஷி மறைந்தார்
* நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார் (1828)
* உலக சித்தர்கள் நாள்
News April 14, 2025
செப்.5இல் வருகிறான் ‘மதராஸி’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. பக்கா ஆக்ஷன் கமர்ஷியலாக உருவாகி வரும் இப்படத்தில் முக்கியமான சமூக பிரச்னையை முருகதாஸ் பேசியிருக்கிறார். மேலும், இப்படத்தினை செப்.5-ம் தேதி வெளியிடும் வகையில் பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இசை மற்றும் வெளிநாட்டு உரிமை விற்பனையான நிலையில் ஓடிடி உரிமையினை விற்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.