News December 13, 2024
GMAIL பயனர்கள்: USA-வை விஞ்சியது இந்தியா

உலக வல்லரசான அமெரிக்காவை ஒருதுறையில் இந்தியா விஞ்சியுள்ளது. எதில் எனத் தெரிய வேண்டுமா? மாதாந்திர GMAIL பயனர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா விஞ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் ஜிமெயில் மின்னஞ்சலை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அதில் 1 கோடி பேர், கட்டண திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் என்ன மின்னஞ்சல் பயன்படுத்துகிறீர்கள்? கீழே பதிவிடுங்கள்.
Similar News
News March 7, 2026
BREAKING: மகளிருக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்

மானிய விலையில் நாப்கின் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் TN அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் மானிய விலை அல்லது இலவசமாக நாப்கின் வழங்க உத்தரவிடக்கோரி லட்சுமி ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், கூடுதல் முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவது குறித்த விவரங்களை அரசு தெரிவிக்கும் என நம்புவதாக கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
News March 7, 2026
FLASH: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்ந்துள்ளது. அதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $90.90 ஆனது. அதன் தாக்கத்தாலேயே 10 மாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையில் <<19316790>>வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்<<>> விலை இன்று அதிகரித்தது. குறிப்பாக 2020 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் உச்சம் தொட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 7, 2026
விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை: அண்ணாமலை

மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எரிவாயு பயன்பாடு 45% அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.


