News January 17, 2026
Gmail-ல் தப்பா Mail அனுப்பிட்டீங்களா? இதோ தீர்வு

Gmail-ல் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்யமுடியும். இதற்கு, ➤Desktop-ல் உள்ள Gmail-ஐ Login பண்ணிக்கோங்க ➤Settings ஆப்ஷனுக்கு சென்று, General Settings-ஐ க்ளிக் செய்யவும் ➤அதில் ‘Undo Send’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதில் 30 Seconds என டைம் செட் பண்ணிக்கோங்க. இவ்வாறு செய்தால், நீங்கள் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்ய உங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். பலருக்கும் பயனளிக்கும், SHARE THIS.
Similar News
News January 23, 2026
உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு!

உலகின் பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவின் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட ஆய்வில், ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
News January 23, 2026
வாய் துர்நாற்றம் வருதா?

வாய் துர்நாற்றம் பெரும்பாலும் வாய் & பல் பராமரிப்பு இல்லாதது, செரிமான கோளாறு, கல்லீரல், சிறுநீரக உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறதாம். இதற்கு: *நன்றாக பல் துலக்க வேண்டும். *நாக்கை வழித்தெடுத்து சுத்தம் செய்ய வேண்டும். *வாயை கொப்பளித்தல் அவசியம். * வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்க புளிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். *மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடவும்.
News January 23, 2026
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ நகரில், அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சையில் உள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து ஆஸி.,யையும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிரவைத்து வருகிறது.


