News August 14, 2024
பிறப்பு, இறப்பு பதிவு இணையதளத்தில் கோளாறு

பிறப்பு, இறப்பு பதிவிடும் மத்திய அரசின் CRS இணையதளத்தில் 4 மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறு நிலவுவதாக பல்வேறு மாநில அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 2023 அக். முதல் crsorgi.gov.in இணையதளத்தில் பிறப்பு, இறப்பை பதிவிடக்கோரி மத்திய அரசு 2023இல் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, அதில் பதிவிட்டபிறகே சான்று அளிக்கப்படும் நிலையில், தற்போது அதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
WPL: ₹3.2 கோடிக்கு தீப்தி சர்மா ஏலம்

WPL ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர்
தீப்தி சர்மாவை ₹3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் வாங்கியுள்ளது. அவரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியாக RTM வாய்ப்பை பயன்படுத்தி தீப்தி சர்மாவை UP வாரியர்ஸ் தட்டித் தூக்கியது. ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங்கையும் ₹1.9 கோடிக்கு UP வாரியர்ஸ் ஏலம் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங் ₹60 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸில் இணைந்துள்ளார்.
News November 27, 2025
ஆதார் குடியுரிமைக்கான சான்று கிடையாது: SC

ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என SIR-க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் SC கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் என்பது குடிமக்கள் சலுகைகளை பெறுவதற்கான ஆவணம் மட்டுமே. ஒருவருக்கு ரேஷன் வாங்குவதற்காக ஆதார் வழங்கினால், வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வரும் டிச.1-க்குள் TN அரசு தாக்கல் செய்த மனுவிற்கு ECI விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
News November 27, 2025
2026-ல் சீமான் போட்டியிடும் தொகுதி இதுவா?

2026 சட்டமன்ற தேர்தலில் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்குடியில் நாதக சார்பில் இன்று நடைபெறும் மாவீரர் நாள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, 2016-ல் கடலூரிலும், 2021-ல் திருவொற்றியூரிலும் போட்டியிட்டு சீமான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.


