News December 15, 2024

பாலிவுட் படங்களுக்கு கிளாமர் தான் முக்கியம்: கங்கனா

image

பாலிவுட் சினிமாவை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். புஷ்பா உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுவதற்கு, அது மக்களின் எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தியதாக இருப்பதுதான் காரணம் எனவும், பாலிவுட் படங்கள் கிளாமர் மற்றும் போலித்தனமான கதையம்சங்களில் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தி படங்களை காட்டிலும், தென்னிந்திய படங்களே பாலிவுட்டில் அதிக வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2026

Gpay-ல் மொத்த பணமும் காலியாகிவிடுமா? CYBER ALERT!

image

Gpay-ல் Pocket money ஆப்ஷனை தொட்டாலே மொத்த பணமும் காலியாகும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம். வங்கி கணக்கு இல்லாத உங்கள் குடும்பத்தினருக்காக <<19598632>>இந்த ஆப்ஷன்<<>> உள்ளது. இதை பயன்படுத்தி QR Scan செய்யும்போது, நீங்கள் PIN உள்ளிட்டால் மட்டுமே அவர்களால் செலவு செய்யமுடியும். ஆகவே பாதுகாப்பானது. பணத்தை எடுப்பதற்கான லிமிட்டை செட் செய்ய, Pocket Money→Add→Set monthly limit என அழுத்தி தொகையை உள்ளிடுங்கள்.

News April 9, 2026

பிரபல இளம் நடிகர் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பாட்ரிக் தன்னுடைய 35-வது வயதில் காலமானார். மூன்று ஆண்டுகளாக மோட்டார் நியூரான் என்ற நரம்பியல் நோயுடன் போராடி வந்த இவரது உடல்நிலை திடீரென சீரியஸானது. இதனையடுத்து 10 நாள்களுக்கு முன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவர், Game of thrones, Blue lights ஆகிய பிரபல சீரிஸ்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றவர்.

News April 9, 2026

காங்கிரஸுக்காக பிரசாரம் செய்ய மறுக்கிறாரா சிதம்பரம்?

image

திமுக-காங்., கூட்டணி அமைந்ததற்கு ப.சிதம்பரமும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், தான் கைகாட்டும் நபர்களுக்கு சீட் வழங்குவார்கள் என எதிர்பார்த்தாராம் சிதம்பரம். ஆனால் அப்படி நடக்காததால், கோவையில் காங்., போட்டியிடவுள்ள கவுண்டம்பாளையம், சிங்காநல்லூரில் அவர் பிரசாரம் செய்வதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவரது சுற்றுப்பயண பட்டியலில் இந்த தொகுதிகள் விடுபட்டுள்ளதாம்.

error: Content is protected !!