News September 11, 2025
பள்ளிக்கு விடுமுறை அளித்தது தவறு: அன்பில் மகேஸ்

திருச்சியில் ஒரு பள்ளிக்கு விடுமுறை அளித்து, அங்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்தியதற்கு <<17667160>>அண்ணாமலை கண்டனம்<<>> தெரிவித்திருந்தார். இந்நிலையில், CEO-விடம் கேட்காமல் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தவறு என தெரிவித்த அவர், இதுபோல் இனி நடக்காது என உறுதியளித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
சூறாவளி கிளம்பியதே.. WCக்கு குறிவைத்த ரோஹித்

இந்திய அணியின் ODI கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சில மாதங்களாக கிரிக்கெட் களம் காணாமல் இருந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ODI தொடருக்கு தயாராக பயிற்சியை தொடங்கியுள்ளார். ரோஹித் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக வதந்திகள் பரவினாலும், 2023ல் தவறவிட்டதை 2027ல் அடையும் எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
News September 11, 2025
7,000 கைதிகள் தப்பினர்

நேபாளத்தில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் சிறைகளில் இருந்து தப்பியுள்ளனர். அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல சிறைகளில் இருந்து 7 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ளனர். அதில் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்திருக்கின்றனர். உ.பி எல்லையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு ராணுவம் அதிகாரத்தை கையிலெடுத்துள்ளதால் இயல்பு நிலை திரும்புகிறது.
News September 11, 2025
ஜனாதிபதி ஆகி இருப்பேன்: ராமதாஸ்

தான் நினைத்திருந்தால் ஜனாதிபதி ஆகியிருக்க முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார். எல்லா பிரதமர்களும் தனது நண்பர்கள் என்றும் PM மோடி தமிழகம் வந்தால் தன்னை கட்டியணைத்துக் கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என குறிப்பிட்ட ராமதாஸ், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் என்றார்.