News March 27, 2024

முதலாளிகளுக்கு சலுகை கொடுத்தால் பிரச்னை தீராது

image

பெரும் முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்கினால் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது என அமைச்சர் PTR தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், சிறு குறு தொழில் முனைவோருக்கு பதில் பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்தால் இந்தப் பிரச்னையை எப்போதுமே சரி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

Similar News

News December 7, 2025

தேனி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

தேனி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

அரசியலில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி?

image

’சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ என Bigg Boss-ல் கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என SM-ல் கேள்வி எழுந்தது. ஆனால், அந்த நோக்கத்தில் அவர் அதை சொல்லவில்லை. சனிக்கிழமை எபிசோடில் VJS-யிடம் BB Contestants பற்றி ஆடியன்ஸ் புகார் வைத்தனர். இதை கேட்ட VJS, ‘ஏதோ தொகுதி மக்களிடம் குறை கேட்டு வந்தது போல் இருப்பதாகவும், சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ எனவும் காமெடியாக சொன்னார்.

News December 7, 2025

தர்மம் மீண்டும் வெல்லும்: ராமதாஸ்

image

<<18492965>>PMK உள்கட்சி<<>> விவகாரத்தில் தலையிட EC-க்கு அதிகாரம் இல்லை என டெல்லி HC தெரிவித்தது. இந்நிலையில், 46 ஆண்டுகள் உழைத்து வளர்த்த பாமகவை, என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்பேன் என்று கூறியுள்ள அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!