News June 23, 2024
தேவையில்லாத பில்டப் தருகிறார்கள்: ஷேவாக்

வங்கதேச அணிக்கு தேவையில்லாத பில்டப்பை தருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் விமர்சித்துள்ளார். ஷகிப் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் வங்கதேச அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றார். ஏற்கெனவே, உலகக் கோப்பை தொடரில் ஷகிப் சிறப்பாக செயல்படவில்லை என ஷேவாக் விமர்சித்து இருந்த நிலையில், அதற்கு ஷேவாக் யார்? என ஷகிப் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 16, 2025
Delhi Blast: காரின் உரிமையாளர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த ஒருவரை NIA கைது செய்துள்ளது. வெடித்த காரின் விவரங்களை கொண்டு NIA விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அதன் உரிமையாளரான அமிர் ரஷித் அலி என்பவர் கைதாகியுள்ளார். இவர் குண்டுவெடிப்புக்கு காரணமான உமர் நபியுடன் இணைந்து தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
News November 16, 2025
ரஜினியை இயக்கும் தனுஷ்?

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை தனுஷ் இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்திருந்த நிலையில், ரஜினியிடம் தனுஷ் ஒன் லைனில் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதை விரிவாக்க பணிகளில் தனுஷ் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ரஜினியை யார் இயக்கினால் நன்றாக இருக்கும் ?
News November 16, 2025
வக்கிரப் பெயர்ச்சி: 3 ராசிக்கு எச்சரிக்கை

நவம்பரில் குரு, புதன் மற்றும் சனி கிரகங்களின் வக்கிரப் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனால் 3 ராசியினருக்கு 2026 மார்ச் வரை சில தொந்தரவுகள் நேரலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம்: *மேஷம்: குடும்பம், சொத்து, தாய்வழி உறவுகளில் கவனம் தேவை *கும்பம்: தொழில் போட்டி, எதிரிகள் அதிகரிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை *ரிஷபம்: குடும்ப பிரச்னைகள், திருமணத் தடைகள் ஏற்பட்டாலும், விரைவில் நீங்கும்.


