News December 4, 2024
ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.10,000 வழங்குக: ராமதாஸ்

ரேஷன் அட்டைதாரருக்கு தலா ரூ.10,000 வழங்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க அவர் கோரியுள்ளார். நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 1, 2025
ஆட்டநாயகன் விருதுகள்… உச்சத்தை எட்டும் கோலி!

SA-வுக்கு எதிரான முதல் ODI-யில் சதம் அடித்த கோலி ஆட்டநாயகனாக தேர்வானார். இதன் மூலம், சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 70 முறை ஆட்டநாயகன் விருதை அவர் வென்றுள்ளார். ODI-யில் 44 முறை, T20-யில் 16 முறை, டெஸ்டில் 10 முறை ஆட்டநாயகனாக கோலி தேர்வாகியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் 76 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கடவுளின் ரெக்கார்டை கிங் முந்துவாரா?
News December 1, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு, டிச.1-ம் தேதி (இன்று) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். இந்த விடுமுறையை ஈடு செய்ய டிச.13-ம் தேதி பணி நாளாக இருக்கும். மேலும், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 1, 2025
One last time.. ஹேப்பி டிசம்பர்!

ஆண்டின் கடைசி மாதம் வந்தாச்சு. இந்த 11 மாதம் உங்களின் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பாருங்கள். நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள். என்ன தவறிழைத்தீர்கள், எதில் முன்னேற்றம் காண வேண்டும் என கவனியுங்கள். ஒரு வருடம் வீணாகிவிட்டதே என வருந்த வேண்டாம். 2025-ன் கடைசி பக்கத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முடிவெடுங்கள்.. செயலில் இறங்குங்கள். ஹேப்பி டிசம்பர்!


