News October 25, 2024
தீபாவளி ஊக்கத்தொகையாக ₹5,000 கொடுங்க!

அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு ₹5,000 தீப ஒளி ஊக்கத்தொகையாக வழங்க வேண்டுமென தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். புதுவை அரசு ஊக்கத்தொகை வழங்குவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அனைத்து செலவுகளுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் அரசால் செய்ய முடியும்போது தமிழக அரசால் ஏன் முடியாது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆதரவற்ற தொழிலாளர்களுக்கு அரசு துணை நிற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News October 25, 2025
காஸா ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு இந்தியா நன்றி

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.
News October 25, 2025
மதுபிரியர்களுக்கு ஷாக்: இங்கு 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.28, 29,30 ஆகிய தேதிகளில் அம்மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News October 25, 2025
அன்புமணி OUT, ஸ்ரீகாந்தி IN.. ராமதாஸ் அதிரடி ஆக்ஷன்

பாமகவின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றார். பாமக இளைஞரணி செயலாளராக தமிழ்க்குமரன் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்தார். முன்னதாக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி கட்சிக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.


