News October 27, 2024
விஜய் கையில் கீதை, திருக்குர் ஆன், பைபிள்

தவெக மாநாட்டு மேடையில் அதன் தலைவர் விஜய்க்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. வாளை கையில் ஏந்தி, தொண்டர்கள் மத்தியில் தூக்கிப்பிடித்து காண்பித்தார். இதன்பின் ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் அரசியல் சானம், இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை, இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆன், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் உள்ளிட்ட நூல்கள் பரிசாக விஜய்க்கு வழங்கப்பட்டது.
Similar News
News January 22, 2026
ஜெ., போல விஜய்யும் ஜெயிப்பார்: செங்கோட்டையன்

திமுகவும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. ஆனால், தவெகவோ செயல்படாமல் முடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், 2011 தேர்தலின்போது மூன்றே இடங்களில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தி வெற்றி பெற்ற ஜெ.,வை போல விஜய்யும் வெற்றி பெறுவார் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். TTV – OPS ஆதரவாளர்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 22, 2026
ADMK போல இரவோடு இரவாக கைது செய்யவில்லை: CM

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுடன் TN அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சி போல அரசு ஊழியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைக்கவில்லை எனவும் பதிலளித்துள்ளார். ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும் அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் அளவுக்கு EPS பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
News January 22, 2026
இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு… நோ டென்ஷன்!

பத்திரப் பதிவுத்துறையின் 18 சேவைகளை உள்ளடக்கிய ஸ்டார் 3.0 செயல் திட்டத்தினை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் வீட்டிலிருந்தபடியே காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், திருமணப் பதிவு உள்பட முக்கிய சேவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் எந்த முறைகேடும் இன்றி தொழில்நுட்ப உதவியுடனும், வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெற வேண்டி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


