News December 13, 2024
பெண் குழந்தைகள் நலத்திட்டம்: வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

பெண் குழந்தைகள், பெண்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 7, 2026
நேபாளத்தில் பிரதமராகும் இளம் ‘ராப்’ பாடகர் ஷா!

அண்டை நாடான நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் தேசிய சுதந்திர கட்சி(RSP) அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நடந்த 165 தொகுதிகளில் 101 இடங்களை RSP கைப்பற்றியுள்ளது. இதனால், பிரபல ‘ராப்’ இசை பாடகரான பாலேந்திர ஷா(35) பிரதமர் நாற்காலியில் அமர உள்ளார். ஊழலற்ற நிர்வாகத்தை பேசி வரும் இவர், 2022 தேர்தலில் காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.
News March 7, 2026
இதுபோல் அரசியல் செய்ய மாட்டோம்: சீமான்

தமிழகத்தில் பணவசதி படைத்தவன்தான் அரசியல் செய்ய முடியும்; வாக்குக்கு காசு கொடுக்காதவர்கள் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். பணம் இருக்கிறவன்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் உழைக்கும் மக்களுக்கான அரசியலோ, அதிகாரமோ இந்த நிலத்தில் இருக்காது என்றார். பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய நாங்கள் வரவில்லை; மக்களுக்கு நல்லாட்சி தர வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
News March 7, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹25,000.. வங்கிக்கு வந்தது!

முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹25,000 வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கோவை, கொண்டம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி 2025 ஜூலையில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பெயர் ஏற்கெனவே KMUT-ல் இருந்துள்ளது. மகேஸ்வரியின் வங்கி கணக்கிற்கு பதிலாக UP-ஐ சேர்ந்த சாந்திதேவியின் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தது. இதனால், சப்-கலெக்டர் உத்தரவால் ஒரே தவணையாக ₹25,000 வழங்கப்பட்டது.


