News August 18, 2024

பெண்ணும் பெண்ணுமா..? செல்லாது செல்லாது

image

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அவர்கள் தனக்கு பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், மாமியார் மற்றும் நாத்தனார் மீது அப்பெண் கொடுத்த பாலியல் தொல்லை (354 A) வழக்கை ரத்து செய்தது. ஒரு பெண் மீது இன்னொரு பெண் பாலியல் தொல்லை வழக்கு கொடுப்பது செல்லாது எனவும் தெரிவித்தது.

Similar News

News August 14, 2025

ஆம்னி பஸ்களில் ஜெட் வேகத்தில் உயர்ந்த கட்டணம்!

image

3 நாள்கள் தொடர் விடுமுறையால் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் நிலையில், ஆம்னி பஸ்களில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,700, மதுரைக்கு ₹3,800, நெல்லைக்கு ₹4,000, தூத்துக்குடிக்கு ₹3,500, கோவைக்கு ₹3,700 என தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044-24749002, 26280445 எண்களில் புகார் அளிக்கலாம் என TN அரசு தெரிவித்துள்ளது.

News August 14, 2025

உரிமைத் தொகை.. 12 லட்சம் பேரின் நிலை என்ன?

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது விண்ணப்பங்களின் நிலையை பரிசீலிப்பதில் ஏன் தாமதம் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 2 நாள்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும், ஆனால் 1 மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஏமாற்றுவேலை என்றும் காட்டமாக கூறியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

News August 14, 2025

ஆபரேஷன் சிந்தூர்: 9 பேருக்கு ‘வீர் சக்ரா’ விருது

image

79-வது சுதந்திர தினத்தையொட்டி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த விமானப்படை வீரர்களுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் கேப்டன்கள் ரன்ஜீத் சிங் சித்து, மணீஷ், அனிமேஷ் பட்னி, குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்குவாட்ரன் லீடர்கள் சர்தக், சித்தாந்த் சிங், ரிஸ்வான் மற்றும் பிளைட் லெப்டினன்ட் ஆர்ஷ்வீர் சிங் தாகூர் ஆகியோர் இவ்விருதை பெறவுள்ளனர்.

error: Content is protected !!