News March 30, 2025
இதய நோயை தடுக்கும் இஞ்சி

இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நன்மைகள் ஏராளம்: *இதயநோய் வராமல் தடுக்கிறது, ரத்தவோட்டத்தை சீராக்கும் *செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது *மலச்சிக்கல், வயிற்றுவலி, வாயுத்தொல்லையை போக்கும் *நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் *மாதவிடாய் வலிகளை தணிக்க உதவும் *மூட்டுவலிகளை குறைக்கும் *தலைவலிகளுக்கு நிவாரணம் தரும் *இஞ்சியை உணவில், தேநீரில் கலந்து உட்கொள்ளலாம். தனியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Similar News
News April 1, 2025
நட்சத்திர அந்தஸ்தை நழுவ விட்ட முன்னணி வீரர்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக இருக்கும் டேனில் மெத்வதேவ், 2023-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஏடிபி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாமல் சறுக்கியுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த அவர், கடந்த ஆண்டு நடந்த எந்த டென்னிஸ் தொடரிலும் பட்டம் வெல்லவில்லை. இதனால், ஏடிபி தரவரிசையில் அவர் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடம் பிடித்துள்ளார்.
News April 1, 2025
மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிப்பதில் குழப்பம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுடையவர்களுக்கு 3 மாதத்திற்குள் உதவித் தொகை அளிக்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு யார்-யார் விண்ணப்பிப்பது? ரேஷன் கடையில் விண்ணப்பிப்பதா? இ-சேவை மையத்திலா? என அறிவிப்பு இல்லை. இதனால் பெண்கள் குழப்பத்தில் உள்ளனர்.
News April 1, 2025
900 மருந்துகளின் விலை உயருகிறது!

நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் 900 மருந்துகளின் விலை 1.74% இன்று முதல் உயருகிறது. ரசாயனங்கள், உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள NPPA அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மருந்துகள் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் மருந்துகள் விலை உயருகிறது. Ex. வைரஸ் தடுப்பு மருந்தான Acyclovir 200mg 1 மாத்திரைக்கு ₹7.74, 400mg 1 மாத்திரைக்கு ₹13.90 உயருமாம்.