News December 5, 2024
ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் பாதிப்பை குறைக்கும் இஞ்சி

எலும்புகள் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் பாதிப்பிற்கு உள்ளாவதைத் தடுக்கும் Anti-inflammatory பண்புகள் இஞ்சிக்கு இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. ஜிங்கிபெரீன், அந்தோசயனின், லிக்னன்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் தோலை சீவி நறுக்கி, தேனில் போட்டு ஊறவிட்டு தினமும் வெறும் வயிற்றில் காலையில் உண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் குறையும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News December 6, 2025
அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென மாறியது

கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News December 6, 2025
45 வயது முதல் இனி பெண்களுக்கு Lower berth!

மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ரயிலில் Lower Berth இருந்தால், அது தானாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், முன்பதிவில் கேட்காவிட்டாலும், Quota அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.


