News April 23, 2025

கில்லுக்கு குவியும் வெற்றிகள்.. பாராட்டிய முன்னாள் வீரர்

image

ஒரு பேட்ஸ்மேனாக அசத்துவது மட்டுமின்றி கேப்டனாகவும் களத்தில் மிகச் சிறப்பாக ஷுப்மன் கில் செயல்படுவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். முன்பு வளர்ந்து வரும் வீரராக இருந்த அவர் தற்போது மிகச் சிறப்பான கேப்டனாக மாறியுள்ளதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Similar News

News December 1, 2025

நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் CPR: PM மோடி

image

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் முதல் ராஜ்ய சபா கூட்டம் என்பதால், அவருக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய PM, எளிய குடும்பத்தில் இருந்து வந்த CPR, நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் என்று புகழ்ந்தார். கோவை குண்டுவெடிப்பில் CPR உயிர் தப்பியதை பற்றி குறிப்பிட்டு பேசிய PM, உங்களுடன் நீண்ட நாள்களாக பணியாற்றி வருவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

News December 1, 2025

ஒரு மாசத்துக்கு இலவச பீர்.. ஆனா ஒரு கண்டிஷன்

image

USA-ல் தற்போது சட்டவிரோத குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காட்டினால் ஒரு மாதத்துக்கு இலவச பீர் வழங்குவதாக அங்குள்ள, ‘ஓல்டு ஸ்டேட் சலுான்’ மதுபான கடை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, சர்ச்சையை கிளப்புவதில் இக்கடை செம்ம பேமஸ். முன்னதாக, Pride மாதத்தின் போது LGBTQ-வினருக்கு எதிராக இக்கடை விளம்பரம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

News December 1, 2025

BREAKING: அமளியால் முடங்கிய லோக்சபா

image

எதிர்க்கட்சி MP-க்களின் அமளியால் லோக்சபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, TMC, SP உள்ளிட்ட கட்சிகளின் MP-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என <<18436891>>PM மோடி<<>> வலியுறுத்தியிருந்தார்.

error: Content is protected !!