News October 10, 2025
கில் பெற்ற முதல் வெற்றி.. கலாய்த்த வீரர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. டெஸ்ட் கேப்டனாக கில் ஆனதும், பெற்ற முதல் டாஸ் வெற்றி இதுவாகும். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 6 முறை தோல்வியை சந்தித்தார். இன்று டாஸில் வென்றதும் புன்னகை ததும்ப கில் வருவதும், கம்பீர் மற்றும் இந்திய அணி வீரர்கள் அவரை கைகொடுத்து கலாய்க்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.
Similar News
News October 10, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News October 10, 2025
விஜய் பரப்புரையில் முக்கிய திருப்பம்!

கரூரில் விஜய் வருவதற்கு முன்பே தண்ணீர், உணவின்றி பலர் மயங்கி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக SC-ல் TN அரசு தெரிவித்துள்ளது. மேலும், விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே காரணம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், விஜய் தண்ணீர் பாட்டில் வீசிய இடத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. விஜய் வருவதற்கு முன்பே பலர் மயங்கிய நிலையில், போலீசார் தொடர்ந்து அனுமதி அளித்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News October 10, 2025
கவாஸ்கருக்கு பிறகு ஜெய்ஸ்வால் அபார சாதனை

WI அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடிவரும் ஜெய்ஸ்வால் சதம் (120* ரன்கள்) கடந்து களத்தில் உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கருக்கு (69 இன்னிங்ஸ்) பிறகு வேகமாக 3,000 ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் (71 இன்னிங்ஸ்) பெற்றுள்ளார். அதேபோல், 23 வயதிற்குள் குறைவான இன்னிங்ஸில் (48 இன்னிங்ஸ்) அதிக சதம் (7) அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.