News April 21, 2024

ரீ ரிலீஸில் வசூலை அள்ளும் ‘கில்லி’

image

விஜய் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ‘கில்லி’ 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று ரீ ரிலீஸ் ஆனது. எவர் க்ரீன் படமான கில்லிக்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இப்படம் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.4 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்படும் ஒரு படத்தின் முதல் நாள் அதிகபட்ச வசூல் இதுவாகும். நீங்கள் இப்படத்தை பார்த்துவிட்டீர்களா?

Similar News

News August 19, 2025

அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

image

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

அமித்ஷா மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மையா?

image

நெல்லையின் தச்சநல்லூர் பகுதியில் ஆக.22-ம் தேதி அமித்ஷா தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்க முடியாது என நெல்லை மாநகர துணை ஆணையர் கூறியதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், காவல்துறை சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான அனுமதி பரிசீலனையில் உள்ளது எனவும், பேனர் வைக்க மட்டுமே அனுமதி மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

டி.ஆர்.பாலுவின் மனைவி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

image

சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார். என் ஆருயிர் நண்பர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவால் வேதனையடைந்தேன். ஆர்.பாலு மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!