News August 7, 2025
ஆசிய கோப்பை அணியில் கில் நீக்கம்? கிரிக்கெட் ரவுண்ட் அப்

*ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், கில், ராகுல், பும்ரா, பண்ட்டுக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என தகவல். * ஹண்ட்ரட் தொடரில் மான்செஸ்டர் அணியை சதர்ன் ப்ரேவ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. *மகளிர் ஹண்ட்ரட் தொடரில் பெண்கள் அணியில் மான்செஸ்டர் அணியை சதர்ன் ப்ரேவ் அணி வென்றது. *துலிப் டிராபி தொடரில் North Zone அணிக்கு கில் கேப்டனாக நியமனம்.
Similar News
News August 8, 2025
டிரம்பின் 50% வரியால் பெரும் சிக்கலில் திருப்பூர்

திருப்பூரில் இருந்து வருடத்திற்கு சுமார் ₹10,000 கோடிக்கு மேல் ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. தற்போது அமலான 50% வரியால் இந்திய தயாரிப்புகளின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும். இதனால் வியட்நாம், வங்கதேசமிடமிருந்து இறக்குமதி செய்ய அங்குள்ள நிறுவனங்கள் முன்வரலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இச்சூழலால் திருப்பூர் ஜவுளித்துறைக்கு ₹12,000 கோடி வரை இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
News August 8, 2025
அதிமுகவுடன் கூட்டணிக்கு ரெடி, ஆனால்.. அன்புமணி கன்டிஷன்

கூட்டணி தொடர்பாக அதிமுகவுக்கு அன்புமணி நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. Ex மினிஸ்டர் ஒருவரை தொடர்புகொண்டு, கூட்டணிக்கு தயார்; ஆனால் பாமக உள்விவகாரத்தில் தலையிட கூடாது என்றாராம். ஒன்றிணைந்த பாமகவுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தை என EPS கறார் காட்டும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை தன் தரப்புக்கான அங்கீகாரம் என நினைக்கிறாராம். தந்தையை பலவீனப்படுத்த மகன் கையிலெடுத்த வியூகம் பலிக்குமா?
News August 8, 2025
நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் நாயகி?

நடிகர் அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இப்படத்துக்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.