News September 27, 2025
புதுச்சேரியில் தீபாவளிக்கு பரிசுத் தொகுப்பு

தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சூர்ய காந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 பொருட்கள் கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்தத் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.
Similar News
News September 27, 2025
வரலாற்றில் இன்று

1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவி ரயில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1933 – நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்.
1959 – ஜப்பானின், ஒன்சூ தீவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1998 – கூகுள் தேடுபொறி தொடங்கப்பட்ட நாள்.
News September 27, 2025
நிலவுக்கு துருப்பிடித்துவிட்டதா? வியக்க வைக்கும் விஞ்ஞானிகள்

பூமியிலிருந்து உருவாகும் ஆக்ஸிஜன் துகள்களால் சந்திரன் துருப்பிடித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹெமாடைட் என்னும் இரும்பு ஆக்சைடின் படிவம் நிலவில் படித்துள்ளதையே துருப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. நிலவு எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படுவதாக நீண்ட காலமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அதில் துருப்பிடித்துள்ளது, ஆச்சரியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நிலாவோட கலர் மாறுமா?
News September 27, 2025
உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளித்தால் சிக்கலா?

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.