News August 24, 2024
மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் – ஆட்சியர் அறிக்கை

நெல்லை மாவட்ட நிர்வாகம் & மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற 28, 29, 3, 4, 5, 10, 11, 12 ஆகிய நாட்களில் நடக்கிறது. இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கயுள்ளது. விவரங்களுக்கு 0462-2986989 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
திருநெல்வேலி முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பயிற்சி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு விரைவில் களப்பணி தொடங்கும்.
News October 31, 2025
BREAKING நெல்லை: மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

நரசிங்கநல்லூர் பகுதியில் குடும்பத்தகராறில் இன்று மாமியார் வள்ளியம்மாளை(45) மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ளார். மோதல் சம்பவத்தை தடுக்கச் சென்ற வள்ளியம்மாளின் மகள் துர்காவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தாய், மகள் இருவரையும் வெட்டிய துர்காவின் கணவர் ஆறுமுக நயனாரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
News October 31, 2025
பாரதியார் பிறந்தநாள் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பே.ரா.விடுத்துள்ள செய்தி குறிப்பு: பொதிகை தமிழ் சங்கம் சார்பில் மாநில அளவிலான பாரதியார் பிறந்தநாள் கவிதை போட்டிகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கவிதைகளை 36 வரிகளுக்குள் எழுதி வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் pothigaitamilsangam@gmail.com என்ற இணையதளத்தில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


