News September 30, 2025
வாயில் முதலையுடன் ராட்சத டைனோசர்

அர்ஜென்டினாவில் சுமார் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய டைனோசர் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசரின் தாடைகளுக்கு இடையே முதலையின் கை எலும்பு இருந்துள்ளது. 23 அடி (7 மீட்டர்) நீளமுள்ள இந்த டைனோசரின் மண்டை ஓடு, கைகால்கள் மற்றும் வால் பகுதிகள் கிடைத்துள்ளது. மேலே, இந்த பெரிய ராட்சத டைனோசரின் போட்டோக்கள் உள்ளன. ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News March 24, 2026
பாஜகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது: உதயநிதி

தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சி இங்கு வெற்றி பெறாது என்று DCM உதயநிதி ஸ்டாலின் தெரித்துள்ளார். கோவை இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பாசிச பாஜகவை துணிச்சலாக எதிர்த்து நிற்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்; 4 அடிமைகளைப் பிடித்து வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது, அது என்றுமே நடக்காது என்றார்.
News March 24, 2026
அதிமுக மீது ஜி.கே.வாசன் அதிருப்தி

பாஜக, பாமக, அமமுக ஆகிய NDA கூட்டணி கட்சிகளுக்கான <<19456028>>தொகுதி பங்கீடு<<>> ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அந்நிகழ்வில் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதே கூட்டணியில் 2021-ல் த.மா.க. 6 இடங்களில் போட்டியிட்டது. தற்போது 8 சீட் கேட்கப்பட்டதாகவும், 4 மட்டுமே அதிமுக தர தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக 6 சீட் வேண்டும் என்று திட்டவட்டமாக உள்ளனர்.
News March 24, 2026
அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்

2026 தேர்தலில் தவாகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். வேல்முருகனை சந்தித்த அவர், கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அவர், திடீரென தவாக பக்கம் தாவியுள்ளார். முன்னதாக, தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியில் இடம்பெறுவேன் என வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.


