News April 3, 2025
தென்னிந்தியாவில் பேய் மழை கொட்ட போகுது: IMD

மத்திய மற்றும் தென்னிந்தியாவில் அடுத்த சில நாட்களில் கன மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. கேரளா, மாஹே, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அப்போ, குடையை எடுத்து ரெடியா வைங்க.
Similar News
News April 6, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்… அரசு புதிய அறிவிப்பு

நிரந்தர முகவரி இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் இனி LPG கேஸ் பெற அட்ரஸ் Proof அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பதில், ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து இந்த 5 கிலோ Free trade LPG (FTL) கேஸை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 5 கிலோ LPG கேஸை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
பிரேமலதா, துரைமுருகன், காந்தி வேட்புமனு தாக்கல்

காட்பாடியில் துரைமுருகன், ராணிப்பேட்டையில் அமைச்சர் <<19578964>>காந்தி<<>>, விருத்தாசலத்தில் பிரேமலதா, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போடியில் ஓபிஎஸ், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன், சிவகங்கையில் கருணாஸ், நாகையில் ஜவாஹிருல்லா, திருக்கோவிலூரில் கெளதம சிகாமணி, விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
News April 6, 2026
டேட்டிங் APP.. கணவன், மனைவிக்கு தெரியாமல் உறவு!

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டேட்டிங் APP-களின் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 65% ஆண்களும், 35% பெண்களும் என நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் டேட்டிங் APP-களை பயன்படுத்துகின்றனர். இதில், 18% உடன் பெங்களூரு முதலிடத்திலும், ஹைதராபாத் 17% உடன் 2-ம் இடம், டெல்லி 11% உடன் 3-ம் இடத்தில் உள்ளது.


