News March 31, 2025
‘Ghibli’ ட்ரெண்டில் இபிஎஸ்.. வைரலாகும் போட்டோஸ்!

கடந்த சில நாள்களாக Ghibli ட்ரெண்ட் தான் உலகளவில் வைரலாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து இந்த ட்ரெண்டில் தற்போது அரசியல் தலைவர்களும் இணைந்து விட்டனர். புது என்ட்ரியாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சும் வந்துவிட்டார். அவர் தனது X தளத்தில் சில Ghibli ஸ்டைல் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். க்யூட்டா இருக்கு’ல!
Similar News
News April 2, 2025
மா சே துங் பொன்மொழிகள்

*மரம் அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை. *போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். *புரட்சி என்பது இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது. * துப்பாக்கியைக் கொண்டே உலகம் முழுவதையும் திருத்தி அமைக்கலாம். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும்.
News April 2, 2025
இந்த மாதம் 3 படங்கள் மட்டும் போதுமா?

வரும் 10ஆம் தேதி அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அதேபோல், வரும் 18ஆம் தேதி சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’, 24ஆம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீசாக உள்ளது. இதை தவிர்த்து, பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இந்த மாதம் ரிலீசாகவில்லை. 2925-ன் முதல் 3 மாதங்களில் 65 படங்கள் வெளியான நிலையில், இந்த மாதம் 3 முக்கிய படங்கள் மட்டுமே ரிலீசாக உள்ளது.
News April 2, 2025
தோனி இல்லை என்றால் IPL-க்கு தான் இழப்பு: கெயில்

IPL-ல் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்கு உயர்வதாக கெயில் தெரிவித்துள்ளார். தலைசிறந்த வீரரான அவர் மீது தேவையில்லாத அழுத்தங்களை செலுத்த வேண்டாம் எனவும், அவர் 11ஆவது வீரராக களமிறங்கினாலும் தனக்கு கவலையில்லை எனவும் கெயில் கூறியுள்ளார். மேலும், தோனியின் கீப்பிங் திறன் அதே ஷார்ப்புடன் இருப்பதாகவும், தோனி விளையாடாவிட்டால் அது IPL-க்குத்தான் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.