News April 3, 2025
‘Ghibli’ செய்வோர் ஜாக்கிரதை.. சைபர் கிரைம் எச்சரிக்கை

சோஷியல் மீடியாக்களில் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். டிரெண்டிங் மோகத்தில் நீங்கள் பதிவிடும் போட்டோ, பிறந்தநாள் தகவல்களை திருடி, அனுமதியின்றி உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இதனால், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது டிரெண்டாகும் OpenAI ஜிபிலி செய்தவர்கள் அவர்களது போட்டோ, DOB பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News November 16, 2025
SIR பணிகளில் திமுக தலையிடுகிறது: அதிமுக

SIR பணிகளை, திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. SIR படிவங்கள் மூலம் பிற கட்சி வாக்குகளை நீக்குவதாகவும், அதிகாரம் & பண பலத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து திமுக இதை செய்வதாகவும் சாடியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
BREAKING: விலை தாறுமாறாக மாறியது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹6 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி கிலோ ₹104-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால், தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை உயர்கிறது. அதேபோல், முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.95-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
News November 16, 2025
₹44,900 சம்பளம், இன்றே கடைசி: APPLY NOW!

புலனாய்வு துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 258 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மேலும் தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


