News April 15, 2025
Ghibli க்கு நோ சொல்லுங்க; சேலம் சைபர் கிரைம் எச்சரிக்கை!

Ghibli-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக சேலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.
Similar News
News October 14, 2025
கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு!

நாமக்கல்லில் வறுமையில் வாடும் தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விசாரணையில் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் மோகன் (48), ஆனந்தன் (45) ஆகிய இருவரும் கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
News October 14, 2025
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் அக்டோபர் 14 இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்1) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் 2) சேலத்தாம்பட்டி தேன்மொழி மண்டபம் பனங்காடு 3)அயோத்தியாபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலகம் டி. பெருமாபாளையம் 4)பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி திருமண மண்டபம் வடக்கு நாடு 5)ஓமலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியேரிபட்டி 6)மேச்சேரி கே வி எஸ் மஹால் ஓலைப்பட்டி
News October 13, 2025
இரண்டு வருட தலை மறைவு குற்றவாளி கைது

சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் அம்மாபேட்டை சேர்ந்த மோகனசுந்தரம். இவர் நீதிமன்றப் பிணையாணையில் வெளியே வந்தார். மீண்டும் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இரண்டு வருட காலமாக தேடி வந்த நிலையில் இன்று அம்மாபேட்டை பகுதியில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.