News May 23, 2024
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கானா பாடல்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்…” சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் “வாட்டர் பாக்கெட்…” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடல், கானா பாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 5, 2026
தம்பதியரே, இதை கவனியுங்கள்

நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு, வீடு பராமரிப்புக்கு, குடும்பத்தினர், நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இந்த நேரத்தை, நீங்கள் உங்கள் கணவன் (அ) மனைவியுடன் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். சமநிலையில் உள்ளதா? இல்லையெனில், இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை யோசியுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கை முக்கியமானது. சரி தானே?
News March 5, 2026
ஈரானுக்கு சீனா உதவியதா?

சீனா ஈரானுக்கு ரகசியமாக ட்ரோன்கள், ஏவுகணைகள், பிற மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தை வழங்கி உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் ஆதரவு இல்லாமல் ஈரான் இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், ஈரான் அதன் எதிரிகள் மீது நடத்தி வரும் துல்லியமான தாக்குதல்களை மேற்கோள் காட்டி பின்னணியில் சீனா இருப்பதாக பலரும் விவாதித்து வருகின்றனர்.
News March 4, 2026
சரியான நேரத்தில் சரியான முடிவு.. செல்வபெருந்தகை

<<19298958>>தொகுதி பங்கீடு ஒப்பந்தம்<<>> கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த முடிவால் தாங்கள் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதாக கூறினார். மேலும், யார் ராஜ்யசபா MP என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.


