News October 26, 2024

கஜினி 2.. சூர்யா புது அப்டேட்

image

கஜினி 2ஆம் பாக படத்தை எடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். வெற்றி படங்களின் 2ஆம் பாகத்தை எடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கஜினி படத்தின் 2ஆவது பாகம் குறித்து சூர்யா தகவல் வெளியிட்டுள்ளார். கஜினி 2ஆவது பாகத்தை எடுக்கலாமா என தயாரிப்பாளர் கேட்டதாகவும், அதற்கு தாம் சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

Similar News

News July 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 390 ▶குறள்: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. ▶ பொருள்: கொடுத்தலும், முகமலர்ந்து பேசுதலும், முறைசெய்தலும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்காவான்.

News July 9, 2025

’ஆந்திராவில் காவி வேஷ்டி, தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி’

image

பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் பவன்கல்யாண் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக பேசிய ரோஜா, ஆந்திரா வந்தால் காவி வேஷ்டி, தமிழ்நாட்டுக்கு சென்றால் பச்சை வேஷ்டி அவர் உடுத்திக் கொள்வதாகவும், திடீர் திடீரென இந்த பக்தர், அந்த பக்தர் என்றெல்லாம் அவர் பேசுவதாகவும் தெரிவித்தார்.

News July 9, 2025

3வது டெஸ்டில் பும்ரா களமிறங்குவாரா?

image

இந்தியா- இங்கி., இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், நாளை தொடங்கும் லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என்றும், பெருமைமிக்க லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரை பதிக்க விரும்புவார் என இங்கி., முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!