News November 18, 2024
விரைவில் திருமணம்: அதர்வா

விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, அனைவரும் தன்னிடம் திருமணம் எப்போது என்று தொடர்ந்து கேட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தாம் திருமணம் செய்யப் போகும் பெண் யார்? அவர் நடிகையா? உறவுக்கார பெண்ணா? என்பது உள்ளிட்ட விவரங்களை அதர்வா தெரிவிக்கவில்லை. உங்களுக்கு அவர் யாரை திருமணம் செய்ய இருக்கிறார் என்று தெரியுமா? கீழே பதிவிடுங்க.
Similar News
News March 22, 2026
பாஜகவில் இருந்து பிரபல தமிழ் நடிகர் விலகல்?

ஒரே இரவில் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத்குமார், ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் சரத்குமார் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் சமக-வை தொடங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி இருக்கிறார்களாம். அதை கேட்டுக்கொண்ட சரத், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறாராம்.
News March 22, 2026
இமாச்சலில் MLA-க்களின் சம்பளம் பிடித்தம்.. ஏன்?

இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் அமைச்சர்கள், MLA-க்கள் & உயர் அதிகாரிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு 3% – 50% வரை சம்பள குறைப்பு அமலில் இருக்கும் என CM அறிவித்துள்ளார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் மானிய பற்றாக்குறையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News March 22, 2026
யார் இந்த தி.வேல்முருகன்?

திருவொற்றியூர் பாமக நகரச் செயலாளராக அரசியலுக்குள் நுழைந்தார். 1996-ல் அதே தொகுதியில் வேட்பாளராக முதல்முறையாக அரசியல் களம் கண்டார். 2001, 2006-ல் பண்ருட்டி பாமக MLA-வாக வெற்றி பெற்ற அவர், 2011-ல் நெய்வேலியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2012-ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பாமகவிலிருந்து நீக்கப்பட்ட வேல்முருகன், அதே ஆண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார். 2021-ல் பண்ருட்டி தவாக MLA ஆனார்.


