News April 20, 2025
இனி இதை பழக்கப்படுத்திக்கோங்க

வெயிலை சமாளிக்க, சம்மர் சீசன் முடியும் வரை.. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்க ‣நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடுங்க ‣வாரம் இருமுறை ஆயில் பாத் எடுங்க ‣வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் வெச்சிக்கோங்க ‣காட்டன் ஆடைகளை அணியுங்க ‣காரமான உணவுகளை தவிர்க்கவும்
Similar News
News November 11, 2025
₹7,000 கோடி to ₹5,000 கோடி.. இழப்பை குறைக்கும் VI

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 2-வது காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர இழப்பை ₹5,524 கோடியாக குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹7,176 கோடியாக இருந்தது. அதேபோல், வருவாய் ₹11,194 கோடி (முன்பு ₹10,932 கோடி), ஒரு கஸ்டமரிடம் ஈட்டும் சராசரி வருவாய் ₹188-ஆக (முன்பு ₹166) உயர்ந்துள்ளது. முன்னதாக, வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியது.
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: கார் ஓனர் அடையாளம் தெரிந்தது

<<18252501>>டெல்லி குண்டு வெடிப்பில்<<>> ஈடுபடுத்தப்பட்ட கார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. HR26 CE 7674 என்ற பதிவெண் கொண்ட அந்த காரானாது, ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த முகமது சல்மான் என்பவருக்கு சொந்தமானது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, ஜம்மு & காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு காரை விற்றுவிட்டதாக தெரிவித்ததுள்ளார். அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
News November 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 516 ▶குறள்: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். ▶பொருள்: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.


