News May 1, 2024

தேர்தல் ஆணைய அனுமதி பெற்று விரைவில் நிவாரணம்

image

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்காடு மலைப்பாதையில் நேற்று நடைபெற்ற கோர விபத்தில், 6 பேர் பலியானார்கள். காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News April 2, 2026

மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

News April 2, 2026

எரிபொருள் தட்டுப்பாடு… WFH-க்கு மாறும் மலேசியா!

image

ஈரான் போரின் தாக்கம் பல ஆசிய நாடுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை, பாக்., உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலையேற்றமும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஏப்.15 முதல் அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய மலேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஓரிரு வாரங்களில் போர் நிலவரம் சீரடையவில்லை எனில், நம் நாட்டிலும் இந்த தாக்கம் அதிகரிக்கலாம்.

News April 2, 2026

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

image

வணிக சிலிண்டர்கள் விலை உயர்வைத் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையும் உயரும் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில், நாடு முழுவதும் வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், ஹிந்துஸ்தான், சிலிண்டர்கள் விநியோகம் சீராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.

error: Content is protected !!